TikTok வீடியோவுக்காக கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கம்; கொல்லப்பட்ட இளைஞர்; இன்ஃப்ளூயன்ஸர் கைது | Teen Killed by Lioness Let Out of Cage for TikTok Video; Influencer Arrested

Spread the love

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களைப் பதிவிட்டு பிரபலமடைய வேண்டும் என்ற ஆசை சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது.

பாகிஸ்தானின் லாகூரில் TikTok வீடியோ எடுக்கப்பட்டபோது, சிங்கம் தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரின் கஹ்னா (Kahna) பகுதியில் உள்ள தனியார் வனவிலங்கு இனப்பெருக்கப் பண்ணையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தல்ஹா (Talha) என்ற 19 வயது இளைஞர் அங்கு பணியாற்றி வந்துள்ளார். அப்போது வீடியோ எடுப்பதற்காக அங்கு வந்த சமூக வலைதளப் பிரபலமான நௌமான் ஹசன் (Nauman Hassan), கூண்டிலிருந்த பெண் சிங்கத்தை வெளியே கொண்டுவரச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

வீடியோ படப்பிடிப்பின்போது அந்த பெண் சிங்கமானது கட்டுப்பாட்டை இழந்து தல்ஹாவைத் தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பண்ணையின் உரிமையாளர் ஃபய்யாஸ் மற்றும் TikTok பிரபலமான நௌமான் ஹசன் ஆகிய இருவரையும் லாகூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஏற்பட்ட காயங்களை முதலில் நாய் கடித்ததாகக் கூறி சம்பவத்தை மறைக்க முயன்றதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சிங்கம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பண்ணைக்கு உரிய அனுமதி இருந்ததா, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *