TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்; தவெகவின் வாக்குறுதிகளும், மக்கள் எதிர்பார்ப்பும் என்ன? | Live Updates|All Eyes on Tamil Nadu’s 2026-27 Budget Presentation

Spread the love

தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் இது.

தேர்தல் வாக்குறுதிகளில் தவெக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் பெண்களுக்கு…

மதிப்புமிகு மகளிர் திட்டம் – 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய்,

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் – ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கல்,

வெற்றிப் பயணம் திட்டம் – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம்,

அண்ணன் சீர் திட்டம் – பெண்களின் திருமணத்திற்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீர்.

இளைஞர்களுக்கு…

வேலைவாய்ப்பு தாமதச் சூழல் நிதி உதவி – வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ. 2,500 இளைஞர் நல நிதி,

தவெக வாக்குறுதிகள்

தவெக வாக்குறுதிகள்

இளைஞர்கள் பங்களிப்பில் நமது நல்லாட்சி – ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் “முதல்வர் மக்கள் சேவை நண்பர்’ பதவியின் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்குத் தலா ரூ. 18,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு,

வெற்றி தொழில் முனைவோர் திட்டம் – இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற ரூ. 25 லட்சம் வரை பிணையமில்லாத் தொழில் கடன்.

அரசுப் பணியாளர்கள்…

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்,

5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம்.

இப்படியான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வாக்குறுதிகளில் என்னென்ன நாளைய பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது என்பதில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *