TNPL 2026: Hariharan’s Explosive Batting Powers Dindigul; Salem, Madurai Suffer Defeats

Spread the love

TNPL 2026 18-வது மற்றும் 19-வது லீக் போட்டிகள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸையும்,

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியையும் வீழ்த்தியது.

திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கும் சேலம் ஸ்பார்டன்ஸ்குமான 18-வது லீக் போட்டி மழையின் காரணமாக தலா 15 ஓவர்கள் மட்டுமே என்ற முடிவில் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதுவே திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கு சாதகமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சிவம் சிங் மற்றும் வி.கே.வினீத் இருவரின் பார்ட்னர்ஷிப் சிறப்பான ரன்களை கொடுத்தது.

திண்டுக்கல் அணியின் கேப்டன் இந்திரஜித் தனது Blast-ஆன பேட்டிங்கின் மூலம் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள்,8 சிக்சர்களை விளாசி 73 ரன்களை குவித்தார். இது ஆட்டத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது. இதனால் சேலம் அணி நெருக்கடிக்குள்ளானது. இவருடன் இணைந்த விமல் குமார் 35 ரன்களை அடிக்க இருவரின் பார்ட்னர்ஷிப் வெறும் 24 பந்துகளில் 62 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்து இலக்கு வைத்தது.

பரபரப்பாக ஆரம்பித்த இரண்டாவது இன்னிங்ஸில்

கேப்டன் எஸ்.அபிஷேக் மட்டுமே அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்திருந்தார். பேஸ்மண்ட் வீக்காகி அடுத்தடுத்து வீக்கெட்டுகள் சரிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 15 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *