மொபைல் போன் ரீசார்ஜ் பேக்கேஜ்களில் பெரும்பாலான திட்டங்கள் 28 நாள்கள், 84 நாள்கள் என ரவுண்டாக இல்லாமல்தான் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், போன் பேசினால் மட்டும் போதும் என்பவர்கள் கூட, டேட்டா பேக்கேஜையும் சேர்த்துப் போட வேண்டியதாக உள்ளது. இதில் எல்லாம் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது TRAI.
இதுவரை பெரும்பாலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில், அழைப்புகள், SMS மற்றும் இணைய டேட்டா ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.
இதனால், இணையத்தைப் பயன்படுத்தாத பயனாளர்களும், தங்களுக்குத் தேவையில்லாத டேட்டாவுக்கான கட்டணத்தையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழலை மாற்றும் வகையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் Voice மற்றும் SMS சேவைகளுக்கு மட்டும் தனியான ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று TRAI அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம், ‘எனக்கு அழைப்புகள் மட்டும் போதும்’ என்று நினைக்கும் பயனாளர்கள், தங்களுக்குத் தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்ய முடியும்.
28 நாள்கள் ரீசார்ஜுக்கு மாற்றம் வருமா?
மொபைல் பயனாளர்களிடம் நீண்ட காலமாக இருந்த மற்றொரு முக்கியமான புகார் – 28 நாள்களுக்கு மட்டுமேயான ரீசார்ஜ் திட்டங்கள்.ஒரு மாதம் என்று நினைத்து ரீசார்ஜ் செய்தாலும், 28 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது.