TVK: செந்தில் பாலாஜிக்குச் சவால் தரும் ‘விஜய்யின் தளபதி’ செந்தில் குமார்; 6வது சுற்றின் முடிவு என்ன? | Tvk candidate Senthil Kumar challenges Senthil Balaji

Spread the love

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க-வில் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க-வில் அம்மன் அர்ச்சுணன், த.வெ.க-வில் செந்தில்குமார், நா.த.க-வில் பேரறிவாளன் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்னிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 878 ஆக உள்ள நிலையில், தேர்தலில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 122 பேர் வாக்களித்தனர். இதனால் வாக்கு சதவீதம் 82.13 ஆக உள்ளது.

இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இருப்பினும் தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அ.தி.மு.க. இந்தப் போட்டியில் பின்தங்கி மூன்றாவது இடத்திலேயே நீடித்து வருகிறது.

6 வது சுற்று முடிவில் செந்தில் பாலாஜி வெறும் 803 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்தச் சுற்று முடிவில் செந்தில் பாலாஜி 18,685 வாக்குகளும், த.வெ.க. செந்தில் குமார் 17,882 வாக்குகளும், அ.தி.மு.க. அம்மன் அர்ச்சுணன் 7698 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்தத் தொகுதியில் தி.மு.க, த.வெ.க இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *