Vijay performs Chatru Samhara Pooja in Tiruchendur; Will the victory calculation work-திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார பூஜை செய்த விஜய்; வெற்றிக் கணக்கு பலிக்குமா

Spread the love

சத்ரு சம்ஹார யாகத்தின் பலன்கள் குறித்து திருக்கோயிலைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் சிலரிடம் பேசினோம், ”எதிரிகள், தீய சக்திகள், வழக்குத் தொல்லைகள் மற்றும் நோய்களிலிருந்து விடுபடச் செய்யும் மிகவும் சக்திவாய்ந்த பூஜை. எதிர்மறை சக்திகளை அழித்து, வெற்றி, மன உறுதி மற்றும் தைரியத்தை அருளுகிறது. கடன் தொல்லை, தொழில் நஷ்டம் நீங்குதல், செவ்வாய் தோஷ நிவர்த்தி மற்றும் உடல், மன ஆரோக்கியம் மேம்படும். இது குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. எதிரிகளை வென்று அரசியல் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை சில அரசியல்வாதிகளிடையே காணப்படுகிறது.” என்றனர்.

கையில் வேலுடன் விஜய்

கையில் வேலுடன் விஜய்

முதல் முறையாக நடிகர் விஜய் இந்த சத்ருசம்கார பூஜையை நடத்தி இருக்கிறார்.  இந்த பூஜை அவரது அரசியல் பயணத்திற்கு சாதகமாக அமையுமா, அதன் தாக்கம் தேர்தல் முடிவில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது காலத்தின் போக்கில்தான் தெளிவாகும். தேர்தல் முடிவடைந்து பிற கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறக்கூடிய திருச்செந்தூரில், சூரசம்ஹார மூர்த்தி சந்நிதியில் சத்ரு சம்ஹார பூஜையை நடத்திச் சென்றிருக்கிறார் விஜய்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *