தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு வழங்கப்படும் எம்மி விருதுகள் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் விருது வழங்கும் பிரசண்டராகப் பங்கேற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.
இதன் மூலம் எம்மி விருது விழாவுக்கு விருது வழங்குபவராகச் சென்றிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, “சர்வதேச எம்மி விருது விழாவில் கலந்துகொள்வது இதுவே எனக்கு முதல் முறை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது உண்மையிலேயே பெருமையாகவும் சிறப்பாகவும் உணர வைக்கிறது. இதற்கு முன்பும் நான் நியூயார்க் வந்திருக்கிறேன்.
ஆனால், இந்த முறை வருவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் அல்ல. திடீரென அமைந்த ஒரு சர்ப்ரைஸ்” என்றார்.