நேற்று நடைபெற்ற காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பிறகு சிறிதளவு உணவையே எடுத்துக்கொண்டதாகவும், எனினும் அவர் எடை கூடுதலாக அதிகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
2024 ஒலிம்பிக் தொடரின் மகளிர் பிரிவு மல்யுத்தத்துக்கான இறுதிப்போட்டி இன்று (ஆக. 7) நடைபெற இருந்தது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், அமெரிக்காவின் சாரா அன் ஹில்ட்பிரான்ட் உடன் மோத இருந்தார். இறுதிப்போட்டிக்கு 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.
இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 52 கிலோ எடையில் இருந்ததால் அவர் உடனடியாக எடையைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரவு முழுவதும் தொடர் ஓட்டம், சைக்கிளிங் என கடுமையாக உடற்பயிற்சி செய்து 1.9 கிலோ எடை குறைத்தார். 50 கிலோவுக்கு கூடுதலாக 100 கிராம் இருந்ததால், இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இரவு முழுவதும் கடுமையாக உழைத்ததோடு மட்டுமல்லாமல், 12 மணிநேரத்திற்கு தண்ணீர் உள்பட எந்தவித உணவையும் வினேஷ் எடுத்துக்கொள்ளவில்லை என அவரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.