சீனாவின் ஹூபய் (Hubei) மாகாணத்தைச் சேர்ந்தவர் சாங் சியாவோகியோ (Zhang Xiaoqiao – 32). இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏழு வெவ்வேறு வேலைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்த வேண்டும் என்பதற்காக, சமூக ஊடகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுத் தோல்வியைக் கண்டார். அவரின் பல்வேறு முயற்சிகள் தோல்வியைத் தழுவிய நிலையில், சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ ஒன்றை கவனித்திருக்கிறார்.
அந்த விடீயோவில், மனைவி கணவனுக்கு சொறிந்துவிடும் காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில், எனக்கும் யாராவது இப்படி சொறிந்துவிட்டால் நான் பணம் தருகிறேன் எனப் பலரும் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

அதைப் பார்த்தவுடன் யோசனை வந்தவராக ஷென்செனின் பாவோஅன் (Baoan) மாவட்டத்தில், `இங்கு சொறிந்துவிடப்படும்” என்ற விளம்பரத்துடன் கடையைத் தொடங்கினார். இப்போது சாங் சியாவோகியோவுக்கு சீனாவின் பரபரப்பான நகரங்களில் சொரிந்துவிடுவதற்கான இரண்டு கிளைக் கடைகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் மாதம் சுமார் 100,000 யுவான் (தோராயமாக ரூ. 14 லட்சம்) ஈட்டி வருகிறார்.