VIT: “படைப்பாளியைப் பார்க்காமல் படைப்புகளைப் பாருங்கள்”- ஞானபீடம் வைரமுத்துவுக்கு `ஞானம்பாடி’ விருது

Spread the love

மார்ச் 14ஆம் தேதி ஞானபீட விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. அதே வாரத்தில் என் வீடு தேடி வந்தார் வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன் ஐயா. இந்த விருதுக்கு நாங்கள் ஒரு பாராட்டு விழா நிகழ்த்த வேண்டும் என்றார். நான் மகிழ்ந்து போனேன். ஆனால் அவருக்குச் சொன்னேன், விருது அறிவிக்கப்பட்டுதான் இருக்கிறது. முதலில் விருது வழங்கப்படட்டும்… பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டேன். இந்தக் காலத்தில் எப்போது என்ன ஆகிறது என யாருக்கும் தெரியாது. ஏனென்றால் டெல்லிக்கு இன்னொரு பெயர் உண்டு. தந்திர பூமிதான் டெல்லி. அந்த தந்திர பூமியிலிருந்து இதற்கு ஏதாவது மாற்றாக நிகழ்ந்துவிட்டால் என்ன செய்வது, கொஞ்சம் பொறுங்கள் எனக் கூறிவிட்டேன். ஜூலை 13ஆம் தேதி ஞானபீட விருது எனக்கு வழங்கப்பட்டது.

அப்போது வழங்கப்பட்ட விருதுக்கு இதோ ஆகஸ்ட் 14ஆம் தேதி மற்றொரு விருது வழங்கி இருக்கிறது வேலூர் வி.ஐ.டி தமிழியக்கம். உழைப்பவனின் வியர்வை காய்வதற்குள் அவனுக்கான ஊதியத்தை வழங்கிவிடு என்கிறார் நபிகள் நாயகம். விருது பெற்றவனின் கைகளில் அந்த விருது இறக்கி வைக்கப்படுவதற்குள் அடுத்த விருது வழங்கி பெருமை சேர்க்கும் தமிழியக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள். பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் கூட குறையலாம், தங்கத்தின் விலை திடீர் என்று 40 ஆயிரமாக குறைந்தாலும் குறையலாம். ஆனால் ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனைப் பாராட்டுவது என்பது நடக்கவே நடக்காது. ஆனால் என்னை அப்துல் காதர், கவிச்சுடர் பதுமனார் ஆகியோர் அவர்கள் மனதின் ஆழத்திலிருந்து மிச்சமில்லாமல் பாராட்டி இருக்கிறார்கள். இதுதான் தமிழன் காட்டுகிற மரியாதை.” என்றார்.

தொடர்ந்து ஞானபீட விருது குறித்து பேசிய அவர், “இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் எழுதுகிற எழுத்தாளர்களுக்கு ஞானபீடம் என்பதுதான் மோட்சம். ஞானபீடம் என்பதுதான் கனவு. ஞானபீடம் என்பதுதான் உச்சம். எல்லோரும் சொல்கிறார்கள் நோபல் பரிசு பெற்ற படைப்பாளன் என்று பல பேரைக் கொண்டாடுகிறார்கள். ஞானபீடத்திற்கு இன்னொரு பெயர் உண்டு, இலக்கியத்திற்கு இந்தியாவில் வழங்கப்படும் நோபல் பரிசு தான் ஞானபீட விருது. ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்திய குடியரசு தலைவராக இருந்தபோது, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஒற்றை விருது உருவாக்கப்பட வேண்டும். அதற்கு செல்வந்தர்கள் முன்வரலாம் என்று அழைப்பு விடுத்தார். அப்போது வந்தவர்தான் சாந்திபிரசாத் ஜெயின். அந்த பெருமகன் ஒரு ஜெயின் குடும்பத்தைச் சார்ந்தவர்.

அதற்கு குழு உண்டாக்கப்பட்டது. இந்தக் குழுதான் தமிழ்நாட்டிலிருந்தும், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஞானபீட விருதுக்கு விருதாளரை தேர்வு செய்கின்றனர். அப்படி அந்த குழுவுக்கு இந்த ஆண்டு இந்த எழுத்தாளரை நீங்கள் பரிசீலிக்கலாம் என்று பல கடிதங்கள் செல்ல வேண்டும். நம்ம ஊர்ல கடிதங்கள் அப்படி அனுப்பதே இல்லை. ஏனென்றால் ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனை அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிப்பதில்லை. ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனை அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிப்பதில்லை. பேராசிரியர்கள், பல்கலைக்கழகங்கள் வேறு வேலைகளில் இருக்கின்றனர். 11 பேர் கொண்ட தேர்வு குழுவில் பஞ்சாபி, மராட்டி, பெங்காலி, குஜராத்தி, டெல்லி, கன்னடம், மலையாளி என மொழிகளில் உள்ளவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுவரைக்கும் ஒரு தமிழர்கூட அந்த தேர்வு குழுவில் உறுப்பினராய் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *