What is the DMK’s stance? The BJP is struggling to secure the 7 additional members needed to pass the Delimitation Bill.-தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற துண்டுவிழும் 7 உறுப்பினர்களை பெற போராடும் பா.ஜ.க

Spread the love

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 அதிருப்தி எம்.பி.க்களும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் 9 எம்.பி.க்களில் 6 பேரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததன் மூலம் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துவிட்டது. இந்த கட்சிக்கு 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர்.

இது தவிர ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் 4 எம்.பி.க்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறது. இது தவிர காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் திமுகவிற்கு 22 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்கள் 22 பேரும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளார்கள். இன்றைய திமுக கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கட்சிகளும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தாலும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 354 ஆக உயரும். ஆனால் 360 இடங்களுக்கு இன்னும் ஆறு குறைவாக இருக்கிறது.

வாக்குகளின் எண்ணிக்கை இரு தரப்பிலும் சமமாக இருந்தால் சபாநாயகர் வாக்களிக்க முடியும். எனவே மசோதா நிறைவேற ஏழு பேரின் ஆதரவு தேவையாக இருக்கிறது. இந்த 7 உறுப்பினர்களை எங்கிருந்து பா.ஜ.க பெறப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜ்ய சபையில் 244 உறுப்பினர்கள் இப்போது இருக்கின்றனர். அவர்களில் 163 பேரின் ஆதரவு தேவை. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 154 பேர் மட்டுமே இருக்கின்றனர். பிஜு ஜனதா தளம்(5), ஒய்.எஸ்.ஆர்.சி.பி(4) ஆகிய கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தாலே நிறைவேறிவிடும். இது தவிர திமுகவிற்கு 8 உறுப்பினர்களும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இருக்கிறார். திமுக வாக்களிக்கவில்லை என்றால், தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 158 ஆக குறையும். அது மசோதா நிறைவேற மேலும் வசதியாக மாறிவிடும்.

சிக்கல்களை கடந்து இந்த மசோதா நிறைவேறுமா என்பது திங்கள்கிழமை தெரிந்துவிடும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *