குணால் ஷா வாட்ஸ்அப் தலைவராகப் பொறுப்பேற்றதால், க்ரெட் நிறுவனத்தை நடத்த புதிய தற்காலிக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 2020 முதல் க்ரெட்டின் முக்கிய பொறுப்பில் இருந்த மிதென் சம்பத் என்பவர் தற்காலிக சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2018-ல் தொடங்கப்பட்ட க்ரெட் நிறுவனம், கிரெடிட் கார்டு பில் கட்டுபவர்களுக்குச் சலுகைகளை வழங்கும் தளமாக ஆரம்பித்து, இன்று இந்தியாவின் 40 சதவீத கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கையாளும் ஒரு லாபகரமான மாபெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
மெட்டா நிறுவனம் குணால் ஷாவைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் ஒரு முக்கியமான பிசினஸ் பிளான் இருக்கிறது. வாட்ஸ்அப் தளத்தில் விளம்பரங்கள், புதிய பிரீமியம் வசதிகளைக் கொண்டு வந்து அதன் மூலம் வருமானத்தைப் பெருக்குவதே மெட்டாவின் அடுத்த இலக்கு.
இந்தியாவில் பணப் பரிவர்த்தனை மற்றும் பிசினஸ் துறையில் குணால் ஷாவுக்கு இருக்கும் அசாத்திய அனுபவம், வாட்ஸ்அப் செயலியை இன்னும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்று மெட்டா நிறுவனம் முழுமையாக நம்புகிறது.