உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி எப்போதுமே ஆசியாவின் முன்னணிப் புள்ளியாகப் பார்க்கப்பட்டு வந்தார்.
ஆனால், ஜூன் 5, 2026 அன்று வெளியாகியுள்ள புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் புதிய அறிக்கையின்படி, பிரபல “டிக்டாக்’ செயலியின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் சாங் யிமிங், முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
சாங் யிமிங்கின் சொத்து மதிப்பு அசாத்திய வளர்ச்சியைக் கண்டு 92.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுடன், அவர் சீனாவின் முதன்மைப் பணக்காரர் என்ற அந்தஸ்தையும் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளார்.

ஒரு சிறிய வாடகை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தொடங்கப்பட்ட பைட் டான்ஸ் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சி உலகையே வியக்க வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவரது சொத்து மதிப்பு மிகவும் குறைவாகவே இருந்த நிலையில், தற்போது அது ஏழு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.