ஆணி அடிச்ச ரூ 15 ஆயிரம், மரம் வெட்டுனா ரூ 1 லட்சம் அபாரதம்: சென்னை மாநகராட்சி அதிரடி  – Kumudam

Spread the love

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. மரங்கள் அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வனத்துறை மூலமாக நேரடியாக விண்ணப்பித்த நிலையை மாற்றி 12.01.2026 முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், 

விண்ணப்பங்களை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா கண்காணிப்பாளர்/ மேற்பார்வையாளர். சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்படும். கள ஆய்வின் ஆய்வறிக்கினை பசுமை குழுவிற்கு அனுப்பப்படும். பசுமைக் குழுவின் நடவடிக்கை விபரங்கள் குறுஞ்செய்தியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தை வெட்டினால், ஆணி அடித்தால் அபராதம் இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 இலட்சமும், மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *