நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.
தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். பின்னர் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது.
கீர்த்தி சனோன் நடிப்புக்காக மிமி படத்துக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். கடந்தாண்டு வெளியான டோ பட்டி எனும் படத்தை தயாரித்து நடித்திருந்தார்.