சாம்பியன்ஸ் டிராபி: கேப்டன்கள் போட்டோஷுட்டை புறக்கணிக்கும் ரோஹித்?

Dinamani2f2025 01 222fjxssarfb2f20240917280l.jpg
Spread the love

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கேப்டன்கள் படப்பிடிப்பு பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில் ஹோஸ்ட் நாடான பாகிஸ்தானின் பெயரை பொறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ரோஹித் புறக்கணிப்பு?

ஐசிசி தொடருக்கு முன்னதாக கேப்டன்கள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். போட்டியை ஹோஸ்ட் செய்யும் நாட்டில் அனைத்து அணி கேப்டன்களும் சந்தித்து கோப்பையுடன் குழுப் படம் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த சந்திப்பானது பாகிஸ்தானில் பிப். 17 அல்லது 18 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் நிலையில், ரோஹித் சர்மா பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரியம் ரோஹித் சர்மா பங்கேற்பாரா? அல்லது பங்கேற்க மாட்டாரா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை.

இதையும் படிக்க : சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயருக்கு பிசிசிஐ மறுப்பு!

முன்னதாக, ஹோஸ்ட் நாடான பாகிஸ்தானின் பெயரை இந்திய வீரர்களின் ஜெர்சியில் பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதாகவும், ஐசிசி இதனை ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *