மேற்கு வங்கம்: சுவந்து அதிகாரி பதவியேற்பு விழா; மோடி தொட்டு வணங்கிய 97 வயது முதியவர் யார்?

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க புதிய முதல்வராக சுவந்து அதிகாரி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தா வந்திருந்தார்.

அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகன்லால் சர்கார் என்ற 97 வயது முதியவர் காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். அந்த முதியவர் விழா மேடைக்கு வரவழைக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

அப்படியே அவரது காலைத் தொட்டு நரேந்திர மோடி வழங்கினார். அதோடு இருவரும் சில வினாடிகள் பேசிக்கொண்டனர். அந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. யார் அந்த முதியவர் என்ற கேள்வி எழுந்தது.

97 வயதாகும் மகன்லால் சர்கார் பா.ஜ.கவைத் தொடங்கிய ஷியாம் பிரசாத் முகர்ஜியின் உதவியாளர் ஆவார். சிலிகுரியைச் சேர்ந்த மகன்லால் ஷியாம் பிரசாத்தின் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க பயணத்தில் பங்கெடுத்தவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *