தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்: திரிணமூல் காங். புறக்கணிப்பு?

Dinamani2f2025 03 212fxyicna9v2fstal Mamataa.jpg
Spread the love

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை(மார்ச் 22) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய அளவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நகர்வாக இந்த ஆலோசனை கூட்டம் பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் முரண்பாடான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குறிக்கும் விதத்தில் நடத்தப்படவுள்ள மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தரப்பிலிருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து திரிணமூல் கங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது:

இப்போதைய அரசியல் சூழலில், போலி வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போலி வாக்காளர் அடையாள அட்டை பிரச்சினையானது பிகார், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *