மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்.28-ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் – Kumudam

Spread the love

மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை, 222 ஏக்கர் பரப்பளவில், சுமார் ₹2,021 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ஒரு மத்திய அரசின் உயர்தர மருத்துவக் கல்வி மற்றும் சிகிச்சை நிறுவனமாகும். 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2027 பிப்ரவரிக்குள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டம், தற்காலிகமாக ராமநாதபுரத்தில் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில் எய்மஸ் மருத்துமனையில் ஒரு ப்ளாக் மட்டும் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினமே  மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேடை ஏற்றவும் பாஜக, அதிமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக  அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன. விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தின் முதல் ப்ளாக்கை பிரதமர் மோடி திறந்தை வைக்க உள்ளது குறிப்பிடதக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *