இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 474 ரன்கள் குவித்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 140 ரன்களை குவித்தார். மேலும், ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அரைசதம் கடந்து அசத்தியுள்ளனர்.
இந்திய பந்துவீச்சாளர்களின் அதிகபட்சமாக பும்ரா 4, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.