இன்று இந்திய பங்குச்சந்தை சரிவில் முடிந்திருக்கிறது. இந்தச் சரிவிற்கு மிக முக்கியக் காரணம் – Accenture நிறுவனத்தின் சரிவு.
இந்திய பங்குச்சந்தையில் 17.97 சதவிகிதம் குறைந்துள்ளது அக்சென்ச்சர் நிறுவனத்தின் பங்குகள்.
நேற்று (ஜூன் 18) அக்சென்ச்சரின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியானது. அதில் முடிவு அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் தான் இந்தச் சரிவிற்கு காரணம்…

அக்சென்ச்சர் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய், கடந்த ஆண்டை விட 6% (18.72 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. இருந்தாலும், இந்த நிறுவனம் தங்களது எதிர்கால வளர்ச்சி கணிப்பை கொஞ்சம் பலவீனமாகவே தந்துள்ளது.
மேலும், அது தனது 2026 நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சி கணிப்பை, முன்னதாகக் கணிக்கப்பட்ட 3-5% என்ற அளவிலிருந்து இப்போது 3-4% ஆகக் குறைத்துள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து வருகிறது. அனைத்து நிறுவனங்களும் அதை நோக்கி நகர்கின்றன. இதனால், தொழில்நுட்ப பட்ஜெட்டை பொதுவாக அதிகரிக்க வேண்டும்.
ஆனால், தங்களது கிளைன்ட்ஸ் தொழில்நுட்ப பட்ஜெட்டை அதிகரிக்கவில்லை என்று அக்சென்சர் தெரிவித்துள்ளது.