அக்வான் புயல்: 'சென்னைக்கு கிழக்கே மையம்' – நாளை தீவிர புயலாக மாறுகிறது; எப்போது கரையைக் கடக்கிறது?

Spread the love

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அக்வான் புயல் குறித்த இந்திய வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…

“தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ புயல், நவம்பர் 16-ம் தேதி இரவு 11:30 மணி நிலவரப்படி பெரிய அளவில் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்தது.

சென்னைக்கு கிழக்கே…

இது சென்னைக்கு கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும், திருகோணமலைக்கு வடகிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 660 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கே 790 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

எப்போது கரையைக் கடக்கிறது?

நவம்பர் 17-ம் தேதி மாலைக்குள் இது தீவிரப் புயலாகவும், நவம்பர் 19-ம் தேதி காலை வாக்கில் அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

நவம்பர் 20-ம் தேதி நண்பகல் வாக்கில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள நெல்லூர் மற்றும் துனி இடையே மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்றுடன் இது கரையைக் கடக்கக்கூடும்”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *