அப்போது குருதேவ் என்னிடம், ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்கிறீர்களா என்று கேட்டார். அப்போது மக்கள் என்னைப் பார்த்ததும் சூழ்ந்துவிடுவார்கள், ஆட்டோகிராப், போட்டோ கேட்பார்கள், அதனால் ஆசிரமத்திற்குச் சிக்கல் வரும் என்று யோசித்தேன்.
அங்கிருந்த மக்கள் என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நான் நினைத்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரையும் அங்கு நான் பார்த்தேன். நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தார்கள்.
ஆனால், அங்கிருந்த ஒருவர்கூட என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. புகைப்படம், ஆட்டோகிராப் இதையெல்லாம் விடுங்கள்.

ஒருவர்கூட என்னைப் பார்க்கவோ பேசவோ இல்லை. நான் தாமாகச் சென்று கையை அசைத்தேன். ஆனால் யாரும் என்னைக் கவனிக்கவில்லை. நான் எத்தனையோ அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் சந்தித்திருக்கிறேன்.
ஆனால் இந்த அனுபவம் என் ஈகோவை உடைத்துவிட்டது. திரையுலக ஸ்டார்டம் என்பது வந்து போகக்கூடியது. அது கொஞ்சக் காலத்திற்குத்தான் நிலைக்கும்.
ஆனால், இந்த ஆன்மிக ஸ்டார்டம் தான் உண்மையான ‘சுப்ரீம் ஸ்டார்டம்’. மரணத்திற்குப் பிறகும் கூட இந்த ஸ்டார்டம் அப்படியே இருக்கும். சொல்லப்போனால், அது வளர்ந்துகொண்டே தான் இருக்கும்.” எனப் பகிர்ந்திருக்கிறார்.