தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பழனிசாமி பேச்சு | Edappadi Palanisamy speech in Tamilnadu Assembly against vijay

Spread the love

எங்களுடைய அதிமுகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 47 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை விரும்பியே மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறேன்.

எனக்கு கிடைத்த தகவல் படி, ஒரு சில ஆசைவார்த்தைகள் கூறி, அமைச்சர் பதவி தருகிறேன்… வாரிய தலைவர் பதவி தருகிறேன் என்று கூறியதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையா… பொய்யா என்று சொல்கிறேன்.

நீங்கள் தூய்மையான ஆட்சி தருவேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதை அப்படியே செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

எதிரி கட்சியாக அல்லாமல்… எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறுகிறேன்.” என்றார்.

தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணி பேச அனுமதித்தார் “அதிமுக சார்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.

நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படவில்லை. மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். அதனால், அதிமுக தவெகவிற்கு ஆதரவளிக்கிறது”. என்றார்.

வேலுமணி பேச்சுக்கு எடப்பாடி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *