“அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!” – மு.க. ஸ்டாலின் தாக்கு! |dmk-slams-tvk-vijay-over-governance-and-press-meets

Spread the love

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்யையும், தவெக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்காகத் தற்போது அவர் கோவைக்குச் சென்றிருக்கிறார்.

அந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின், “அங்கிள் விஜய் அவர்களே! முதலமைச்சர் பொறுப்பு என்பது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வந்து செல்லும் சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது. இந்த முதலமைச்சர் பொறுப்பிற்காக ஒட்டுமொத்தமாகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டு வாழ வேண்டும்.

இது ஏதோ சினிமா ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் டைம் கொடுத்துவிட்டு, வேஷம் போட்டு செட்டுக்குப் போய்வரும் வேலை கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர் கஷ்டப்பட்டு பாவ்லா காட்டிக் கொண்டிருந்தாலும், அதை ஓவர்டேக் செய்யும் அளவிற்குப் புதுப் புதுப் பிரச்னைகள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன.

தினமும் ஏதாவது ஒரு கிரிமினல் வழக்கில் தவெக நிர்வாகிகள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். டெய்லி தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள், பத்திரிகையில் படிக்கிறீர்கள்.

அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பணம் கேட்டு மிரட்டுகிற வீடியோ, ஆடியோக்கள் லீக் ஆகிக்கொண்டிருக்கின்றன. பலர் வசூல் ராஜாவாக இருக்கிறார்கள். பெண் நிர்வாகிகளுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ஆதாரங்கள் வெளிவருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *