`அடித்து ஆடும் ஸ்டாலின்… அறிக்கை மோடில் உதயநிதி!’ – கொதிக்கும் உடன்பிறப்புகள்! | Stalin Goes on the Offensive, Udhayanidhi Takes a Backseat; DMK Cadres Fume!

Spread the love

த.வெ.க-வுக்கு எதிர் அரசியல் செய்வதில் தி.மு.க தலைவர் பட்டாசாய் வெடித்துவரும் நிலையில் பூஸ்வானமாகப் போயிருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசியல் நகர்வுகள்.

“தலைவரே இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும்போது, சின்னவர் எங்கே.. ஓய்வில் இருக்கிறாரா என வெடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “த.வெ.க ஆட்சியமைந்த நாள் முதலே சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொலை, கொள்ளை, குழந்தை கடத்தல், போதை பொருள் புழக்கம் என தமிழ்நாடே ரணகளமாகிக் கிடக்கின்றன. செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை மறுபக்கம் சிறையிலிருந்து குற்றவாளிகள் தப்பியோடி வருகிறார்கள்.

பயிர்கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளும் புதிய தலைமை செயலகம் அமைக்கக் கூடாதென மீனவர்களும் ஊதிய சிக்கல்கள் குறித்து ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் சைக்கிள் கொள்முதலில் முறைகேடு, டெண்டர் ரத்து செய்யப்படுவதில் தெளிவின்மை என த.வெ.க அரசில் எக்கசெக்க சிக்கல்கள் தலைவிரித்தாடுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *