இதை சட்டமன்றத்தில் நாங்கள் பேசினோம். அதற்கு பதில் சொல்லக்கூடிய முதலமைச்சர் ஒரு பதிலும் சொல்லக் கிடையாது. ஆளுங்கட்சியினர் சட்டமன்றத்தில் என்னென்ன கூத்தடிச்சாங்கன்னு நீங்கள் தொலைக்காட்சியில பார்த்திருப்பீர்கள். இது சட்டமன்றமா? இல்ல சினிமா தியேட்டரா?
இல்ல ஏதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டோமான்னு எங்களுக்கெல்லாம் சந்தேகம். சட்டமன்றத்தின் தரத்தையே ஆளுங்கட்சியினர் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதற்கு எடுத்தாலும் திமுகதான் காரணம் அப்படிங்கறதை ரெடிமேட் பதிலாக இன்றைய ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர்.

நம் தலைவர் செஞ்ச நல்ல பணிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் இந்த ஆட்சியாளர்கள் எதாவது பிரச்னை என்றால் திமுகதான் காரணம் என்கிற ரெடிமேட் பதிலைச் சொல்கிறார்கள். நம் தலைவரைச் சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடு, தலைவரைத் தேடிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசினார்.
தலைவர் என்னைக்கும் தேடிக் கண்டுபிடிக்கிற இடத்துல இருந்ததே கிடையாது. மிசா டைம்ல தலைவரைத் தேடி போலீஸ் கோபாலபுரம் இல்லத்திற்கு அவரைக் கைது செய்வதற்கு வந்தனர். அப்போது, கலைஞர், என்னுடைய மகன் கழக நிகழ்ச்சிக்காக வெளியூரில் இருக்கிறார் வந்ததும் நானே உங்ககிட்ட அனுப்பி வைக்கிறேன் என்று பதில் சொன்னதுடன் வந்ததும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வச்சார்.
இன்னைக்கு மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களின் மூலமாக தமிழ்நாடு முழுக்க தலைவர் நிறைந்திருக்கிறார். மக்களோடு மக்களாக இருக்கிறார். பெரம்பூர் தொகுதி மக்கள், நாங்கள் ஒருத்தரைத் தெரியாத்தனமா ஜெயிக்க வச்சிட்டோம். அவர் எங்க போனார்? யாராவது பார்த்தீங்களா? என்று கேட்டு புலம்புகின்றனர்.
இந்த ஆட்சியில ஒட்டுமொத்த தமிழ்நாடும் மின்சாரத்தைத் தேடிட்டு இருக்கு. கடந்த ஐந்து வருஷம் நல்லா இருந்த சட்டமன்ற ஒழுங்கை மக்கள் தேடிட்டு இருக்கிறார்கள். ஆகவே, கிண்டல் பண்றதா நினைச்சு முதலமைச்சர், அவரை அவரே இன்னைக்கு எக்ஸ்போஸ் பண்ண ஆரம்பிச்சிருக்காரு.
இன்னும் அவர் சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் ஆடலை. அடுத்த கூட்டத்தொடரில் நிச்சயம் ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸும் இருக்கும்கிறது எங்களுடைய எதிர்பார்ப்பு.
தமிழ்நாடு இப்போது பெரிய பேரிடரில் மாட்டிக்கிட்டு இருக்கு. அதிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. நாம் பார்க்காத வெற்றியும் கிடையாது, தோல்வியும் கிடையாது. கட்சியையும் தலைவரையும் மனசில் வச்சு, நம் பணிகளை வகுக்க வேண்டும்” என்றார்.