“முடிவுக்கு வருகிறதா திராவிட ஆட்சி?” – செஞ்சுரி அடித்த தவெக! மூன்றாவது சுற்றில் வெளியான ஷாக் ரிசல்ட்! | “Is Dravidian Rule Coming to an End?” — TVK Hits a Century! Shocking Results Revealed in the Third Round!

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துவருகிறது. தற்போது 10:30 மணி நேர நிலவரப்படி மூன்றாவது சுற்று முடிவில், தவெக 104 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

திராவிடக் கட்சிகளின் பலமான கோட்டைகளைத் தகர்த்து, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தவெக இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மறுபுறம், நீண்ட கால அனுபவம் கொண்ட அ.தி.மு.க கூட்டணி 77 தொகுதிகளிலும், ஆளுங்கட்சியான தி.மு.க கூட்டணி 52 தொகுதிகளிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன.

நாம் தமிழர் கட்சி இதுவரை ஒரு இடத்திலும் முன்னிலை பெறாத நிலையில், சுயேச்சை அல்லது பிற வேட்பாளர்கள் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.

அரசியல் களம் யாருக்கு?

இந்த நிலவரம் திராவிட அரசியலுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் அ.தி.மு.க முன்னிலை வகித்தாலும், சுற்றுக்கள் நகர நகர த.வெ.க-வின் வேகம் அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், த..வெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை (118 இடங்கள்) நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகிறது.

தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய கட்சி, தனது முதல் தேர்தலிலேயே இரண்டு பெரும் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *