“அடையாளம் காட்டிய குழந்தையின் ஸ்கூல் பேக்” யூடியூப்பர் மதுமிதாவின் நகை கொள்ளையில் எஸ்பி சொல்வது என்ன? | What happen in Youtuber Madhumitha house robbery

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 98 சவரன் நகைகள் மீட்பக்கட்டுள்ளன.

இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “​கடந்த 24-ம் தேதி இரவு சுமார் 12:30 மணியளவில் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.ஐ.பி கார்டனில் வசிக்கும் வினோத் குமார் என்பவர் “100′-க்கு அழைத்து, தங்கள் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்தார்.

​உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையக் குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. கொள்ளைச் சம்பவம் என உறுதி செய்யப்பட்டவுடன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தப்பட்டது. வீட்டின் பின்புறக் கதவை கட்டர் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்து, தரைத்தளத்தில் உள்ள இரண்டு அறைகளையும், முதல் தளத்தில் உள்ள அறையையும் சோதனை செய்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

​உடனடியாக கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்திலிருந்து 2 கையுறைகள், 1 முகக்கவசம் மற்றும் கதவை அறுக்கப் பயன்படுத்திய கட்டர் மெஷினின் பிளேடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

​துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் மற்றும் 5 உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ​குற்றவாளிகள் சம்பவ இடத்திற்குள் வந்த வழி குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு, ​குற்றவாளிகள் வெளியேறிய வழி குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு, ​அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதி சாட்சிகளிடம் விசாரிக்க ஒரு குழு, கால் டீட்டெயில்ஸ் ரெக்கார்ட் மற்றும் செல்போன் டவர் லொக்கேசன் தரவுகளை ஆய்வு செய்ய ஒரு குழு., இதே முறையில் இதற்கு முன் குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை ஆய்வு செய்ய ஒரு குழு என தனித்தனியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

கைதுசெய்யப்பட்டவர்கள்

கைதுசெய்யப்பட்டவர்கள்

சம்பவ இடத்தில் இரவு 11:30 முதல் 12:30 மணி வரை சந்தேகப்படும்படி சென்ற 3 பைக்குகளில் ஒரு பைக் பிரதான சந்தேகத்திற்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டது. அந்த பைக்கை ​பின்தொடர்ந்து சென்றோம். இதற்காக மொத்தம் 160 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. நாகர்கோவிலில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலும், அங்கிருந்து பிற மாவட்டங்கள் வரையிலும் கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ​ஒரு சிசிடிவி கேமராவில் குற்றவாளியின் பைக்கின் பதிவு எண் மற்றும் அவரது முகம் தெளிவாகத் தெரிந்தது.

​தொழில்நுட்ப ஆய்வின் மூலம் செல்போன் எண்களை ஆய்வு செய்து ஒரு எண்ணை உறுதிப்படுத்தியபோது, அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பது தெரியவந்தது. ​உடனே தனிப்படை ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்ற நிலையில், அவரது நடமாட்டம் மீண்டும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி வருவது கண்டறியப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *