அட்லி, வெட்டி ஒட்டி படம் எடுப்பதை போலவே சட்டபேரவையில் ஆளுநரின் உரை: திமுக எம்எல்ஏ சிவசங்கர் சாடல்… – Kumudam

Spread the love

தவெக அரசு ஆட்சி அமைந்து நடைபெற்ற எல்லா நிகழ்ச்சியிலும் முதலாக பாடவேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாகவும், அதற்கு பதிலாக வந்தே மாதரம் முதலாக பாடப்பட்டது இது குறித்து அரசியல் களத்தில் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது முதல் நாள் சட்டபேரவையில் தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. இதற்கு திமுக ,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சித்தனர்.

இது குறித்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சரான சிவசங்கர் நேற்று இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது எனவும், ஆளுநருடன் தவெக அரசு இணக்கமாக உள்ளது என்று தெளிவாக தெரிகிறது. முதலமைச்சருக்கு நெருக்கமாக உள்ள இயக்குநர் அட்லி, வெட்டி ஒட்டி படம் எடுப்பதை போலவே சட்டபேரவையில் திமுகவின் சாதனைகளை  எல்லாம் வெட்டி ஒட்டி  ஆளுநரின் உரை இருந்தது என்றும் விமர்சித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த சபாநாயகர், ஒருமுறை 2 முறை பாடப்பட்டது என குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம் ஆளுநருடன் இணக்கமாக இருக்கவேண்டும் என்றே எந்த மாநில அரசும் விரும்பும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து அட்லி படம் எடுப்பது போல் உள்ளது என்ற விமர்சனத்திற்கு பதில் அளித்த தவெகவின் அமைச்சரான ராஜ் மோகன், தமிழ்த் திரையுலகில் இருந்து மக்கள்  பணிக்காக அரசியலுக்கு வந்தவர் எங்களின் முதலமைச்சர். ஆனால் சிவசங்கர் முழு அரசியல்வாதி அவர் அட்லி குறித்து பேசியது அதிர்ச்சையையும் ஆச்சரியத்தையும் தருகிறது அட்லிக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அட்லி பற்றியும் பேசுவேன் சட்னி பற்றியும் பேசுவேன் என்று கடுமையாக சாடியுள்ளார்.இந்நிகழ்வு சட்டச்சபையில் பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர் சிவசங்கரின் கோபம் தவெக ஆட்சி அமைந்து பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன ஆனால் இதையெல்லாம் பற்றி பேசாமல் வாய்யில்லா பிள்ளை போல் விஜய் மௌனம் காத்துக்கொண்டிருக்கின்றார்.அதுமட்டுமல்லாமல் திமுக அரசு அதிக கடன் பெற்றுள்ளது என்று சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்ற பெயரில்  தவெக ஒரு வெற்று அறிக்கையை தான்  வெளியிட்டது இப்படி தொடர்ந்து திமுக மீது தவெக ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கொண்டே இருக்கின்றது என்றும் விமர்சித்துள்ளார்.  .

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *