மதுரை: அரசு பள்ளியில் தோன்றிய ஐன்ஸ்டீன் – மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த ஹாலோகிராம் தொழில்நுட்பம்!

Spread the love

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த முன்னாள் மாணவர், ஹாலோகிராம் (Hologram) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆகியோர் நேரில் வந்தது போன்ற 3D காட்சியை உருவாக்கி, மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள்  தமிழில் உரையாடுவதுபோல காட்சிப்படுத்தியதோடு, அவர்களுடைய கண்டுபிடிப்புகளையும் இதே தொழில்நுட்பத்தின் மூலம் காட்சிப்படுத்தி, அறிவியல் பாடங்களை திரைப்பட அனுபவம் போல் மாற்றியுள்ளார்.

புத்தகங்களில் மற்றும் கரும்பலகையில் மட்டுமே பார்த்த விஞ்ஞானிகளை, நேரில் வந்து பேசுவது போன்ற உணர்வுடன் காண முடிந்தது தங்களுக்கு மிகுந்த ஆர்வத்தையும், புரிதலையும் ஏற்படுத்தியதாக மாணவர்கள் கூறினர்.

மதுரை அரசு பள்ளி

இது குறித்து பள்ளியின் ஆசிரியர்கள் கூறுகையில், “முன்னாள் மாணவர் ஒருவர் தான் படித்த பள்ளிக்காக இப்படியான ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது பெருமை அளிக்கிறது. இது மாணவர்களின் கவனத்தை ஈர்த்து கற்றலை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் இது போன்ற நவீன கற்பித்தல் முறைகளை அதிக அளவில் கொண்டு வர வேண்டும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *