அண்டை மாநில உதவியாளர்கள் எழுதிக் கொடுத்ததா?’ – விஜய்க்கு அப்பாவு கேள்வி | ‘CM Sir, Is This Your Answer?’ Appavu Takes Aim at Vijay

Spread the love

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்த மக்கள் பிரச்னைக்குப் பதில் சொல்ல திராணியில்லாமல் திமுக மேடை பேச்சிகளை எடுத்து பதிலளிக்கும் முதல்வரே!

உங்கள் அமைச்சரவை பெண் உறுப்பினர் அலைபேசி மூலம் “லட்சுமணன்” என்பவரை ஜட்டியோடு உட்கார வைத்து அடித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டியதையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கலாமே CM sir?

தமிழ்நாட்டில் தவெக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் செய்து வருகின்ற கொலை கொள்ளை போதைப் பொருள் விற்பனை பாலியல் சீண்டல் போன்ற வழக்குகள் மீது உறுதியான நடவடிக்கையை எடுப்போம் என்று தெரிவிப்பதை விட்டுவிட்டு

FIR பதிவு செய்து இருக்கிறோம் என அலட்சியமாகச் சொன்ன பதில் மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா CM sir ?

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என்பது பற்றி எந்தப் பதிலும் பேசாமல் அண்டை மாநில உதவியாளர்கள் எழுதிக் கொடுத்ததை சினிமா அங்க அசைவுகளோடு (நடித்து) வாசித்து பொதுக் கூட்டத்தில் நான்காம் தர மேடைப் பேச்சாளரைப் போன்று தரம் தாழ்ந்து பேசியது சட்டமன்றத்தின் மாண்பைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டதே CM Sir?” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *