அண்ணன் கோடு போட்டுட்டான்.. நான் ரோடு போடுறேன் பாருங்க.. மிரட்டலாக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தம்பி | Another ‘Sooryavanshi’ on the Rise, IPL Star Vaibhav’s 10-Year-Old Brother Aashirwad Smashes Cracking Century

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருபவர் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி, 776 ரன்களுடன் ‘ஆரஞ்சு கேப்’ வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்தவர். இந்த நிலையில், வைபவ் சூரியவன்ஷியின் குடும்பத்தில் இருந்து மற்றொரு சிறுவன் கிரிக்கெட் உலகிற்கு தனது வருகையை பதிவு செய்துள்ளார்.

வைபவ் சூரியவன்ஷியின் 10 வயதே ஆன தம்பி ஆசீர்வாத் சூர்யவன்ஷி, பீகாரில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணிக்காக ஆசீர்வாத் விளையாடி வருகிறார்.

Sooryavanshi

உள்ளூர் பயிற்சிப் போட்டி ஒன்றில் களமிறங்கிய 10 வயது ஆசீர்வாத் சூர்யவன்ஷி, எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 87 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 103 ரன்கள் குவித்து அசுர சாதனை படைத்தார். இவரது இந்த மிரட்டலான இன்னிங்ஸில் 20 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். 118.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய இவரின் ஆட்டம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

அச்சு அசலாக அவரது அண்ணன் வைபவின் ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக மைதானத்தில் இருந்தவர்கள் வியந்தனர். ஆசீர்வாத்தின் இந்த அதிரடி சதத்தின் உதவியோடு, தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணி 29.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

தற்போது இந்தியா ‘ஏ’ அணிக்காக முத்தரப்புத் தொடரில் விளையாட இலங்கைக்குச் சென்றுள்ள அண்ணன் வைபவ் சூரியவன்ஷி, தனது தம்பியின் இந்தச் சாதனையை சமூக வலைதளங்களில் கொண்டாடியுள்ளார். ஆசீர்வாத் சதம் அடித்த ஸ்கோர்கார்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “வாழ்த்துகள் ஆசீர்வாத்” என இரண்டு சிவப்பு இதய எமோஜிகளுடன் தனது மகிழ்ச்சியையும், பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசீர்வாத்தின் இந்த முதல் சதம் குறித்து அவர்களது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, “எனது இளைய மகன் ஆசீர்வாத் தனது முதல் சதத்தை அடித்துள்ளார், வைபவை போலவே இவருக்கும் உங்களது அன்பும் ஆசியும் வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் இருந்து அடுத்தடுத்து இரு திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *