“அண்ணன் திருமாவிடம் அ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்”- ஆதவ் அர்ஜுனா கண்டனம்| Aadhav Arjuna condemns that A. Raja should apologize to Thirumavalavan

Spread the love

த.வெ.க அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிக வன்னியரசும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல் ஷாஜகானும் இன்று நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

அ.ராசாவின் பதிவு

த.வெ.க அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா, “முன் “ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்…” என்று விசிகவை கடுமையாகச் சாடியிருந்தார்.

ஆனால் ஆ.ராசா இந்தப் பதிவை உடனே நீக்கிவிட்டார். அவரின் இந்தப் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆதவ் அர்ஜுனா கண்டனம்

இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “அண்ணா கனவு கண்ட அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார் விஜய். இந்தியாவே பார்த்து வியக்கக்கூடிய அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறோம்.

பெரும்பான்மை இல்லாதபோது அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால் நாங்கள் ஆட்சி அமைத்திருக்க முடியும். மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *