
பாஜகவில் தனக்கான அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கப்படவில்லை என்றும், அதிகாரம் கொடுக்காமல் சும்மா டம்மியாக்கி உட்கார வைத்துள்ளனர் என்றும் டெல்லி மேலிடம் மீது அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்செட்டில் இருந்ததாகக் கூறப்பட்டது. அதன்வெளிப்பாடக பாஜகவில் இருந்து அண்ணாமலை விலக முடிவெடுத்துள்ளதாகவும், அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பிரதமர் மோடியை பார்க்க அப்பாயிண்மெண்ட் கேட்டுள்ள அண்ணாமலை, விஜய்க்கு எதிரான அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாமலை ரகசிய மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.
அதாவது கடந்த ஜூன் 2 ஆம் தேதி மைசூருவில் இருந்து வாடகைக் காரில் ஊட்டிக்கு ரகசியமாக விசிட் அடித்த ரஜினிகாந்த், ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கினார் என்றும், அங்கு சிலரை மட்டும் சந்தித்த ரஜினி, மறுநாள் காலையிலேயே கிளம்பிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஒருநாள் இரவு தங்கியிருந்த ரஜினியை சந்தித்த முக்கிய நபர்கள் யார், அவரது விசிட்டின் நோக்கம் என்ன என்று தமிழக அரசின் உளவுத்துறை குடைந்துகொண்டிருக்கிறது.
இத்தகையச் சூழலில், அண்ணாமலையின் டெல்லி விசிட்டும் பரபரப்பாகிவரும் நிலையில், டெல்லிக்கு செல்லும் முன்பாக ரஜினியை அண்ணாமலை அவர் ரகசியமாக சந்தித்தார் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள். அந்த சந்திப்பின்போது தான், எடுக்கும் புதிய முடிவுக்கு ரஜினியின் ஆதரவை அண்ணாமலை கோரினாராம். ”அண்ணாமலைக்கு ஆதரவு தருவது சரியாக இருக்குமா?” என்பதை மைசூரு, ஊட்டி விசிட்டின்போது தன் நலவிரும்பிகளிடம் ஆலோசித்திருக்கிறார் ரஜினி என்றும் கூறப்படுகிறது.
எனவே, அண்ணாமலை புதிய கட்சி தொடங்கியதும் ரஜினியின் ஆதரவாளர்கள் அண்ணாமலைக்கு ஷிஃப்டாவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.