அதிபர் தேர்தல் அரசியலா?: `பிரான்ஸ் எரிகிறது – கடுமையான நடவடிக்கை உண்டு’ – இம்மானுவேல் மக்ரோன்! |Presidential election politics?: ‘France is burning – there will be stern action’ – Emmanuel Macron!

Spread the love

விலைவாசி உயர்வு, மோசமான கல்விச் சூழல் போன்றவற்றைக் கண்டித்து பிரான்ஸ் நாடு முழுவதும் மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது ஆங்காங்கே கலவரமும், கடைகளில் சூறையாடலும் நிகழ்ந்துள்ள நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “நாடு முழுவதும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மானுவேல் மக்ரோன்

இம்மானுவேல் மக்ரோன்

பொதுச் சொத்துக்களைச் சூறையாடியவர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்கியே ஆக வேண்டும். நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க முயன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். தீவிர இடதுசாரி அமைப்புகளின் தூண்டுதலாலும், அவர்களுடன் கைக்கோத்த குற்றவாளிகளாலுமே இந்த வன்முறைகள் வெடித்துள்ளது. வரும் வாரங்களில் பொதுக் கட்டடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களைப் பாதுகாக்க மேயர்களுடன் இணைந்து செயல்படவும், தேவைப்பட்டால் போராட்டங்களுக்குத் தடை விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *