‘அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவது எந்த வகையில் நியாயம்?’- டிடிவி தினகரன்| TTV Dhinakaran has spoken about TVK and the support given to the party by AIADMK MLAs.

Spread the love

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

தவெக குறித்தும் அக்கட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கொடுக்கும் ஆதரவு குறித்தும் பேசிய அவர், “அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவது எந்த வகையில் நியாயம்?

அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த விஜய், அதிமுகவின் பேரைக் கூட சொல்லாமல் சில இடங்களில் மறுத்த விஜய் இன்றைக்கு அதிமுகவின் ஆதரவைப் பெறுகிறார்.

விஜய்- அதிமுக எம்எல்ஏக்கள்

விஜய்- அதிமுக எம்எல்ஏக்கள்

தவெக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விசிக, இடதுசாரிகள் 6 மாத காலம் தாங்குவார்களா எனத் தெரியவில்லை.

அமைச்சர்களாகப் பதவியேற்றால் கம்யூனிஸ்ட், விசிகவின் மானம் போயிருக்கும். தவெக ஆட்சிக்கு இனி கஷ்டகாலம்தான். தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணியில் இருந்து, தேர்தலுக்குப் பின் பதவிக்காக இன்னொரு கூட்டணிக்குச் செல்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *