“தளபதி விஜய்யைக் கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும்!” – மாளவிகா மோகனன் |”I have known Thalapathy Vijay well for the past seven years!” — Malavika Mohanan

Spread the love

அந்தப் பதிவில் அவர், “நேற்றைய தினம் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது எனக்குப் பேரன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு.

ஆனால், அங்கிருந்த ஒரு சிலர் மட்டும் தேவையின்றி கதையைத் திசைதிருப்பும் வகையிலும், ரசனைக்கு அப்பாற்பட்டும் சில கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அது முற்றிலும் தேவையற்ற ஒன்று. தளபதி விஜய்யை கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும்.

அவர் மீது எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதையும் உண்டு. அவரை என்னுடைய நல்லதொரு நண்பர் என்று சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அவருடைய இந்த நெடிய பயணத்தைக் கவனிப்பது என்பது ஒரு அற்புதமான விஷயம்.

இனிவரும் காலங்களில், ஊடகங்களுடனான சந்திப்புகள் பரஸ்பர மரியாதையுடனும், நாகரிகமான முறையிலும் அமைந்தால் அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *