அதிமுக உள்கட்சி மோதல் எதிரொலி: செம்மலை ராஜினாமா அதிர்ச்சி|AIADMK Faces Fresh Crisis as Senior Leader Semmalai Steps Down

Spread the love

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இதை காரணம் காட்டி, அதிமுகவின் சீனியர் தலைவர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.

இந்த விலகலுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…

“தேர்தலுக்குப்பிறகு அஇஅதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது.

இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.

எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்

எடப்பாடி – எஸ்.பி வேலுமணி – சிவி சண்முகம்

கற்பூரம்… கட்சி…

நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா?

“கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா!

நோகுதய்யா; மனசு நோகுதய்யா” என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும்.

“உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது” என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *