அதிமுக: “எடப்பாடி அச்சப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள்!” – கொந்தளித்த சி.வி.சண்முகம் | C.V. Shanmugam has severely criticized Edappadi Palaniswami’s statement.

Spread the love

பொதுக்குழுவை கூட்டுங்கள். அதில் எடுக்கப்படும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவர் மீது தவறு இல்லாததைப் போன்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார். ஒருபக்கம் பேசித் தீர்க்கலாம் எனக் கூறிவிட்டு, இன்னொருபக்கம் கட்சியின் நிர்வாகிகளை நீக்குகிறார். இந்த நடவடிக்கை சட்டத்துக்குப்புறம்பானது, செல்லாது. இப்போது யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தான் பிரமாணப் பத்திரிகையில் கையெழுத்துப்போடவேண்டும்.

தேர்தல் ஆணையத்திலும் நாங்கள்தான் கையெழுத்திடவேண்டும். இவர் எப்படி தேர்வு செய்யப்பட்டார்… அம்மா இறந்தபோது, யார் யாரெல்லாம் நிர்வாகத்தில் இருந்தார்களோ, அவர்கள்தான் எடப்பாடியை நியமித்தார்கள். இப்போதும் அதுதான் நடக்கிறது. எடப்பாடி அச்சப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். உங்கள் பதவி உங்களிடம்தாம் இருக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *