திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38), இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரிப்போர்டராக வேலை செய்கிறார். நேற்று கோவிலூர் பகுதியில் செய்தி சேகரிக்க சென்று விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இரவு வழக்கம் போல் வீட்டில் ஹாஜா தூங்கி கொண்டு இருந்துள்ளார். சுமார் 11.30 மணியளவில் அப்துல் பாசித் என்பவர் தலைமையில் மொத்தம் நான்கு பேர் ஹாஜா முகைதீன் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

வீட்டில் இருந்த அவரது மாமியார் கதவை திறக்க ஹாஜா முகைதீனிடம் பேச வேண்டும் வரச்சொல்லுங்கள் என்றுள்ளனர். அவர்கள் போதையில் இருந்ததால் `ஹாஜா தூங்குறார் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம்” என சொல்லியிருக்கிறார். உடல், ரொம்ப அவசரம் என்று அவர்கள் சொல்ல, மாமியார் ஹாஜாவை எழுப்பி வரவைத்தார். அப்துல் பாசித் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்தவர் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அப்துல் பாசித் தன்னை தாக்கியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என ஹாஜாவிடம் சொல்லி அழைத்திருக்கிறார்.