'அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்!'; மெலிந்த தோற்றத்தில் பென் ஸ்டோக்ஸ் – எதனால் இந்த மாற்றம்?

Spread the love

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சமீபத்திய வீடியோ ஒன்றில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Ben Stokes
Ben Stokes

இங்கிலாந்து அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

இந்தக் காணொளியில் பென் ஸ்டோக்ஸ் மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்தார்.

பென் ஸ்டோக்ஸின் தோற்றத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்திற்கு அவர் சமீபத்தில் மேற்கொண்ட முக அறுவை சிகிச்சை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நெட் பயிற்சியின்போது, பந்து பலமாகத் தாக்கியதில் முகத்தில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்
Ben Stokes – பென் ஸ்டோக்ஸ்

இது குறித்து பிபிசி ஸ்போர்ட்ஸிடம் பேசிய பென் ஸ்டோக்ஸ், “பந்து நேராக எனது முகத்தில் வந்து தாக்கியது. இது மிகவும் பயமுறுத்திய ஒரு விஷயம்.

ஒரு சில இன்ச்கள் விலகி வேறு எங்காவது பந்து தாக்கியிருந்தால், இன்று நான் உங்களிடம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்திருப்பேனா என்பதே சந்தேகம்.

அந்த விபத்தில் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். கன்ன எலும்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது எல்லாம் சரியாகிவிட்டது,” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *