படத்தோட இன்டர்வெல் காட்சியில நாலு ஷாட்ல கிராபிக்ஸ் வேலைகள் சுத்தமா நல்லாவே இருக்காது. பிறகு அதை மாத்திட்டோம். பிறகு கிளைமேக்ஸ்ல வர்ற சிங்கம் சூர்யாவுக்கு திடீர்னு மூஞ்சி அப்படி ஆயிடுச்சேன்னு கேக்குறீங்களா?
அதுக்கு பட்ஜெட் இல்லப்பா!” என நகைச்சுவையாகச் சொன்னவர் ‘கருப்பு’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து, “நான் தியேட்டர்ல போய் ‘காந்தாரா’ படம் பார்த்தப்போ, அங்கிருந்த மக்கள் எல்லாரும் அந்த ஒரு சீனை மெய்மறந்து பார்த்தாங்க.
நமக்குத் தெரியாத சாமியை, தியேட்டர்ல மக்கள் இவ்வளவு பிரமிச்சுப்போய் பார்க்கிறாங்களே, அப்போ நம்ம ஊரு சாமியை வச்சு நாம ஏன் இந்த மாதிரி ஒரு விஷயம் பண்ணக் கூடாதுனு தோணுச்சு.
அப்படி அந்தப் படத்துல இருந்து இன்ஸ்பையர் ஆகிச் சேர்த்ததுதான் இந்த கிளைமேக்ஸ் காட்சி. மத்தபடி கதையில கூடுதலாக எதுவுமே சேர்க்கல.
எல்லாமே எழுதும்போது என்ன இருந்ததோ அதுதான். படத்துல பெருசா டான்ஸ் ஆடுற மாதிரி பாட்டுகள் இல்லைங்கிறதால, எல்லா ஃபைட் சீன்களையுமே பாடல்களோடு சேர்த்துக்கலாம்ங்கிற முடிவை முன்னாடியே எடுத்துட்டோம்” என்றார்.