அதன்படி மொத்தம் 117 தொகுதிகளுக்கு ஏற்கனவே இருப்பவர்களையும் சேர்த்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கபட இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என திமுக வட்டத்தில் சொல்கிறார்கள். இந்தசூழலில் தான் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கிளை கழக நிர்வாகி ஒருவர் எங்கள் தளபதியே இளம் வயதினருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ப்ளக்ஸ் வைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
நீடமாங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த் இல்ல விழா நேற்று மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் திமுக-வினரை வரவேற்கும் விதமாக அந்த ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டது என்கிறார்கள்.

இதுகுறித்து விபரம் அறிந்த திமுக தரப்பினரிடம் பேசினோம், `திமுக-வில் சீனியர்கள் ஆதிக்கம் தேர்தல் தோல்விக்கு பிறகும் குறையவில்லை. இளைஞர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் செயல்பட விடாமல் தடுப்பதாக தோல்விக்கான காரணம் அறியும் குழுவிடம் பல இடங்களில் குமுறினர். சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத் கூட்டம் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன்பு திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் அங்கு நின்றனர்.