“அந்தப் பதவிக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகம்” – குடியரசுத் தலைவரின் வைரல் பாதுகாவலர் பேட்டி! | “The biggest sacrifice I made for that position” – Interview with the President’s viral bodyguard!

Spread the love

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு உதவியாளராகப் (Aide-de-Camp – ADC) பணியாற்றியவர் முன்னாள் சிறப்புப் படை அதிகாரி மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவர் கனிவுடன் கவனித்துக்கொண்ட விதம் சமூக ஊடகங்களில் அவ்வபோது வைரலானது. இந்த நிலையில், அவர் சமீபத்தில் தன் பொறுப்பை ராஜினாமா செய்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியரசுத் தலைவரின் ஏடிசி-யாகச் செயல்பட்ட இவரின் பணி, அன்றாட வாழ்க்கை, கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அட்டவணைகளுக்கு உட்பட்டே நகர்ந்திருக்கிறது.

மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால்

மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால்

குடியரசுத் தலைவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், அவர்கள் நினைப்பதற்கு முன்பே செய்து முடிப்பதே இவரது பிரதான பொறுப்பாக இருந்துள்ளது. ஆனால், இந்த உயரிய மற்றும் கௌரவமிக்கப் பொறுப்பு, இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், தியாகத்தையும் கோரியுள்ளது. அது தொடர்பாக பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “குடியரசுத் தலைவரின் ஏடிசி-யாகப் பணியாற்றுபவர்கள் தங்களின் பதவிக் காலத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற விசேஷ விதிமுறை (Clause) அமலில் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *