ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ், ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதில் நடித்த இளம் நடிகை சாச்சனாவைப் பாராட்டியிருக்கிறார்.
“குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சாச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’.
இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்தப் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது.