குறிப்பாக, 2014-இல் எனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அது கிடைக்கவில்லை.
நான் இரவு முழுவதும் அழுதேன். அப்போது, சுவேந்து எனக்கு ஆறுதல் கூறினார். அதேபோல், நான் முதன்முதலில் கரீம்பூரில் போட்டியிட்டபோது, எனக்காகப் பிரசாரம் செய்ய யாரும் வரவில்லை.

ஆனால் எனது முதல் பேரணியை சுவேந்து அதிகாரிதான் நடத்தினார். இருப்பினும் சுவேந்து இன்று வேறு கட்சிக்குச் சென்றுவிட்டார். அதனால், நாங்கள் இப்போது பேசிக்கொள்வதில்லை. ஆனால், அவர் எனக்கு செய்த உதவியை என்னால் மறக்க முடியாது” என்று பேசியிருக்கிறார்.