Ex-இன்போசிஸ் சிஇஓ துவங்கிய புதிய AI நிறுவனம்.. வேலைக்கு ஆள் எடுக்கிறாராம்.. ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க! | Ex-Infosys CEO Vishal Sikka Launches AI Startup Hang Ten Systems; Aims to Help Enterprises Scale AI Like Never Before

Spread the love

Business

oi-Prasanna Venkatesh

முன்னாள் இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷால் சிக்கா, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ‘ஹாங் டென் சிஸ்டம்ஸ்’ (Hang Ten Systems) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், பெரிய நிறுவனங்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தவும், அதை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் உதவும் என்று அறிவித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்த விஷால் சிக்கா, அப்போது மிகவும் சிறிய அளவில் இருந்த ஒப்பன் ஏஐ நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்கும் வாய்ப்பை இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் நாராயணமூர்த்தி தலைமையிலான நிர்வாக குழு ஏஐ தொழில்நுட்பத்தின் பலத்தை அப்போது உணராமல், இந்த மாபெரும் வாய்ப்பை தட்டிக்கழித்தார். இன்றும் இது பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

Vishal Sikka AI IT Infosys Vishal Sikka new AI startup Hang Ten Systems Vishal Sikka Ex-Infosys CEO AI company Vishal Sikka Mayfield investment Hang Ten Systems hiring AI enterprise transformation startup Vishal Sikka Jerry Yang Aramco Ventures AI investment Vishal Sikka OpenAI Infosys AI startup launched by Vishal Sikka AI AI AI OpenAI AI

விஷால் சிக்கா மாஸ்டர் பிளான்

ஹாங் டென் சிஸ்டம்ஸ் நிறுவனம், வழக்கமான டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் சேவைக்கு அப்பால், செயற்கை நுண்ணறிவின் மூலம் புதிய திறன்களை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவ விரும்புகிறது. ஏஐ-ஐ ஒரு மாற்றும் சக்தியாக பார்க்கும் விஷால் சிக்கா, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பு யாராலும் செய்ய முடியாத விஷயங்களை செய்ய நிறுவனங்களுக்கு உதவுவதே தங்கள் இலக்கு என்று கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் ஏற்கனவே உலகின் முக்கிய நிறுவனங்களான ஃப்ரெசீனியஸ் (Fresenius) மற்றும் சீமென்ஸ் எனர்ஜி (Siemens Energy) உள்ளிட்டவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு ஏஐ-ஐ பயன்படுத்தி புதிய வழிகளில் வளர உதவுவதாக விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.

பெயர் எங்கிருந்து வந்தது?

ஹாங் டென் என்ற பெயர் சர்பிங் விளையாட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சர்பிங்கில் “ஹாங் டென்” என்றால், சர்பரின் பத்து கால்விரல்களும் பலகையின் முன்புறத்தில் இருக்கும் நிலையை குறிக்கும். இது தொழில்நுட்ப மாற்றத்தை வெறுமென ஏற்றுக்கொள்வது அல்லாமல், அதை முழுமையாக கட்டுப்படுத்தி முன்னேறுவதை குறிக்கிறது என்று விஷால் சிக்கா விளக்கியுள்ளார்.

முதலீட்டாளர்கள்

இந்த புதிய நிறுவனத்திற்கு மேய்ஃபீல்ட் (Mayfield) என்ற வென்ச்சர் கேபிடல் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதை நடத்துபவர் நவீன் சத்தா, இவர் விஷால் சிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நண்பர் ஆவார். மேலும் சவுதி அரேபியாவின் அராம்கோ வென்ச்சர்ஸ் (Aramco Ventures) மற்றும் சிலிக்கான் வேலி ஏஞ்சல் முதலீட்டாளர்களும் முதலீடு செய்துள்ளனர்.

யாகூ நிறுவனத்தை தொடங்கிய ஜெர்ரி யாங் (Jerry Yang) இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ளார்.

வேலை ரெடி

ஹாங் டென் சிஸ்டம்ஸ் நிறுவனம் தற்போது தன் குழுவை விரிவுபடுத்தி வருகிறது. சிக்கலான வணிக பிரச்னைகளை ஏஐ-ஐ பயன்படுத்தி தீர்க்க விரும்பும் ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் நிறுவனத்தின் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் விஷால் சிக்கா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *