Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க இங்கிலாந்து ஜாம்பவான் பென் ஸ்டோக்ஸ் பதிவு செய்துள்ள சூழலில், அவரை சிஎஸ்கே அணி வாங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் சிஎஸ்கே அணிக்கு பென் ஸ்டோக்ஸ் தேவை இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க இங்கிலாந்து ஜாம்பவான் பென் ஸ்டோக்ஸ் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் விதிகளின்படி ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்காத வீரர்கள், மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவர் எப்படி ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் ஐபிஎல் அணிகளில் ஒரு அணி கோரிக்கை வைத்ததால், அவர் பெயரை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பென் ஸ்டோக்ஸை வாங்க சிஎஸ்கே அணி விரும்புகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளன. இதனிடையே சிஎஸ்கே அணி கட்டாயமாக பென் ஸ்டோக்ஸை வாங்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியிலும் பேச்சுகள் அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழலில் சிஎஸ்கே அணிக்கு பென் ஸ்டோக்ஸின் தேவை இல்லை என்பதே நிதர்சனம். ஏனென்றால் டிவால்ட் பிரெவிஸ், லிவிங்ஸ்டன், ஜேமி ஓவர்டன் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் மட்டுமே பிளேயிங் 12ல் விளையாட முடியும். அதேபோல் அகீல் ஹொசைன் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் உள்ளது. இந்த 4 பேரை சிஎஸ்கே அணி நீக்குமா என்பதே சந்தேகம் தான்.
லிவிங்ஸ்டன் இடத்தில் பென் ஸ்டோக்ஸை விளையாட வேண்டுமென்றால், சிஎஸ்கே அணி டிரேட் செய்ய வேண்டிய தேவையே இல்லை. அதேபோல் லிவிங்ஸ்டனுடன் ஒப்பிடும் போது ஸ்டோக்ஸால் அதிரடியாக விளையாட முடியுமா என்பதும் சந்தேகம் தான். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் வேலையை செய்ய ஜேமி ஓவர்டன் இருக்கிறார். கடந்த சீசனில் ஜேமி ஓவர்டன் கொடுத்த உழைப்புக்காகவே இந்த சீசனில் வாய்ப்பு அளிக்கணும்.
சிஎஸ்கே அணியின் தேவை வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர், ஒரு அதிரடி பேட்ஸ்மேன் தான். ஹெட்மயர், போல்ட் போன்ற வீரர்களை குறி வைக்கலாம். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியை விடவும் கேகேஆர் அணிக்கு தான் அதிக தேவையாக இருக்கிறார். அந்த அணிக்கு கேப்டன் தேவைப்படும் சூழலில், பென் ஸ்டோக்ஸை அந்த அணி வாங்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.