ஆவணி மாத பலன்: ரிஷப ராசிக்கு சனி, குரு தரும் ராஜவாழ்க்கை.. சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் | Aavani Month Rasi Palan: What benefits will Rishabam rasi people get this month?

Spread the love

Astrology

oi-Varaha

ஆவணி மாத பலன் 2026: சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வரும் அற்புதமான ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், தொழில், குடும்பம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசேஷங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

aavani-month-rasi-palan-what-benefits-will-rishabam-rasi-people-get-this-month

இந்த ஆவணி மாதத்தில் சில ராசியினருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த வகையில், ஆவணி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு தொழில், உத்தியோகம் மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்

ரிஷபம் ராசியினருக்கு மிகவும் அற்புதமான மாதமாக இந்த ஆவணி மாதம் இருக்கும். சனி வக்கிரமாகி குரு பார்வையில் இருப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். எதிரிகளை வெல்லக்கூடிய மாதமாக இருக்கும். இழந்த பெருமை, புகழ் என அனைத்தும் மீண்டும் பெறக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்துப் பார்க்காத அனைத்து விஷயங்களும் நடக்கும் யோகம் உண்டு.

வீடு, நிலம் யோகம்

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, முதலீடு செய்வது போன்ற யோகம் ஏற்படும். காலையில் எழுந்ததும் குளித்து விடுவது அற்புதத்தை ஏற்படுத்தும்.

வெற்றி

சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சமுதாயத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சேமிப்பு, முதலீடு, பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள்.

வாக்குவாதம் வேண்டாம்

உறவுகளுடன் வாக்குவாதம், சண்டைகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினருடன் இணக்கமாக இருப்பது நன்மை பயக்கும். பெற்றோர், பெரியோரிடம் அன்பு செலுத்துவது நன்மை பயக்கும். அதீத ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும். விநாயகர், துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *